குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மொரீஷியஸ் பிரதமர் குடியரசுத் தலைவரை சந்தித்தார்

Posted On: 16 SEP 2025 3:28PM by PIB Chennai

மொரீஷியஸ் பிரதமர் திரு. நவீன்சந்த்ர ராம்கூலம், இன்று (16.09.2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவைச் சந்தித்தார். இச்சந்திப்பின் மூலம் மொரீஷியஸ் பிரதமரின் இந்தியப் பயணம் நிறைவடைந்தது. செப்டம்பர் 9 முதல் 16 வரையிலான இந்தப் பயணத்தில், அவர் மும்பை, வாரணாசி, அயோத்தி மற்றும் திருப்பதிக்குச் சென்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் ராம்கூலம் மற்றும் அவரது பிரதிநிதிக் குழுவை வரவேற்ற குடிரயசுத்தலைவர், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மகாசாகர் தொலைநோக்குப் பார்வை மற்றும் உலகளாவிய  தெற்கு நாடுகளுக்கான உறுதிப்பாட்டில் மொரீஷியஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

ஒவ்வொரு துறையிலும் இந்தியாவிற்கும் மொரீஷியஸிற்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருவதை குறித்து குடியரசுத் தலைவர் திருப்தி தெரிவித்தார். சமீபத்தில் இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான உறவு "மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மை" நிலைக்கு உயர்ந்தது இதற்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.

மொரீஷியஸ் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்புக்கு குறித்து குடியரசுத் தலைவர் சுட்டிக் காட்டினார். புதிய சிறப்பு பொருளாதாரத் தொகுப்பு, மொரீஷியஸ் அரசு மற்றும் அதன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மருத்துவமனைகள், சாலைகள், துறைமுக மேம்பாடு, இராணுவ தளவாட கொள்முதல் மற்றும் கூட்டு கண்காணிப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி, மொரீஷியஸ் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான இருதரப்பு உறவுகள் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி போன்ற புதிய துறைகளுக்கும் விரிவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுவான வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் விழுமியங்களால் பிணைக்கப்பட்ட இரு நாடுகளின் உறவும் தனித்துவமானது என்று இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர். பிரதமர் ராம்கூலம் தலைமையில் இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்று குடியரசுத் தலைவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்தார்.

***

(Release ID: 2167155)

SS/EA/KR


(Release ID: 2167535) Visitor Counter : 11