இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இளைஞர்கள் தலைமையிலான ஜனநாயகத்தின் உண்மையான எடுத்துக்காட்டு-டாக்டர் மன்சுக் மண்டவியா
Posted On:
13 SEP 2025 3:00PM by PIB Chennai
அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்ற பிரதமரின் சுதந்திரதின உரையால் ஈர்க்கப்பட்டு, தேசிய இளைஞர் விழா, வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் என மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் பதிப்பு, வழக்கமான தேசிய இளைஞர் விழாவின் 25 ஆண்டுகால பாரம்பரியத்தை உடைத்து, 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஒரு தேசிய தளத்தை வழங்குவதன் மூலம் இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தங்கள் கருத்துக்களை இளைஞர்கள் நேரடியாக பிரதமரிடம் முன்வைக்க ஒரு உள்ளடக்கிய மற்றும் துடிப்பான தளத்தை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பு இளைஞர் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தில் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறித்தது. இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வளர்ச்சியடைந்த பாரத போட்டியில் கலந்து கொண்டனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் 9,000 இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிகளில் தங்கள் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினர். இந்தப் பயணம் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நிறைவடைந்தது, இதில் வளர்ச்சியடைந்த பாரத போட்டியில் இருந்து 1,500 பேர், கலாச்சார பாதையில் இருந்து 1,000 பேர் உட்பட 3,000 இளைஞர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, சுமார் ஆறு மணி நேரம் இளைஞர்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அவருடன் திரு அமிதாப் காந்த், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ். சோமநாத், தொழிலதிபர்கள் திரு ஆனந்த் மஹிந்திரா,திரு ரித்தேஷ் அகர்வால், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், மூத்த பத்திரிகையாளர் திருமதி பால்கி சர்மா உபாத்யாய் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
முதல் பதிப்பின் வெற்றியின் அடிப்படையில், இரண்டாவது பதிப்பு அதிக பதிவுகள், புதிய தடங்களைச் சேர்ப்பது, பரந்த அளவிலான நடவடிக்கைகள் மற்றும் அதிக லட்சிய நோக்கங்களை இலக்காகக் கொண்டுள்ளது. இரண்டாவது பதிப்பை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இன்று நடைபெற்றது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இளம் இந்தியர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், பிரதமரிடம் நேரடியாக முன்வைக்கக்கூடிய ஒரே தளம் இது என்று கூறினார். இளைஞர்கள் தலைமையிலான ஜனநாயகம், பார்வையை குரலாகவும், குரலை தாக்கமாகவும் மாற்றுவதற்கான உண்மையான எடுத்துக்காட்டு இது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரு செயல்திட்டத்தைத் தயாரிக்க இளைஞர்களின் திறமையையும் ஆற்றலையும் வழிநடத்தும் ஒரு தளம் இது என்றும் அவர் கூறினார். இன்றைய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களும் கூட என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166256
***
AD/PKV/RJ
(Release ID: 2166359)
Visitor Counter : 2