பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் விநாடி வினா போட்டி: 35,470 அணிகள் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளன
Posted On:
12 SEP 2025 2:25PM by PIB Chennai
இந்திய கடற்படையின் தேசிய அளவிலான விநாடி வினா போட்டி, திங்க் 2025-ல் பங்கேற்க 35,470 அணிகள் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளன. 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டி, வாழ்க்கை முறை, பாரம்பரியங்கள், இந்திய கடற்படையின் முக்கிய மதிப்பீடுகள் போன்ற தனித்துவ கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
தற்போது, முதல் கட்ட (எலிமினேஷன்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்த பின், 16 அணிகள் தெரிவு செய்யப்பட்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை கல்வி நிறுவனத்தில் 2025 நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், இறுதி போட்டிகளும் நடைபெறும்.
----
(Release ID: 2165954)
AD/SMB/KPG/KR
(Release ID: 2166058)
Visitor Counter : 2