கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
டாக்டர் பூபன் ஹசாரிக்காவின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஓர் இசைப்பயணம்
Posted On:
07 SEP 2025 8:41PM by PIB Chennai
பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் பூபன் ஹசாரிக்காவின் நூற்றாண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திப்ருகரில் உள்ள குயிஜன்னில் ‘பிஸ்டிர்னா பரோர்: சதியா முதல் துப்ரி வரையிலான ஓர் இசைப் பயணம்’ என்ற சிறப்பு நிகழ்வை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உள்நாட்டு நீர் வழிகள் ஆணையம் தொடங்கவிருக்கிறது.
டாக்டர் ஹசாரிக்காவின் புகழ் பெற்ற படைப்புகளில் ஒன்றன் பெயரில் நடத்தப்படும் இந்த தனித்துவம் வாய்ந்த கலாச்சார பயணம், பிரம்மபுத்திரா நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறுவதுடன் இசை மற்றும் கொண்டாட்டத்தின் வாயிலாக பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும்.
08.09.2025 அன்று குயிஜன்னில் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்படும் இசைப் பயணத்தின் துவக்க விழாவில் டாக்டர் ஹசாரிக்காவின் படைப்பாற்றலைப் போற்றி, இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ஹசாரிக்காவின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை அடிப்படையாக கொண்டு ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி போன்றவை நடைபெறும். மேலும், மோரன், மோடோக், தேயிலைத் தோட்டப் பழங்குடியினர், சோனோவால் கச்சாரி, டியூரி மற்றும் கோர்க்கா சமூகங்களின் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் குழு நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவை, அசாம் மாநிலத்தின் பன்முக கலாச்சாரங்களை பிரதிபலிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2164529
***
(Release ID: 2164529)
SS/BR/KR
(Release ID: 2164542)
Visitor Counter : 2