பிரதமர் அலுவலகம்
ஆசிரியர்கள் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
05 SEP 2025 8:36AM by PIB Chennai
ஆசிரியர்கள் தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உள்ளங்களைச் செழுமைப்படுத்துவதில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, வலிமையான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும் என்று பிரதமர் கூறியுள்ளார். "புகழ்பெற்ற அறிஞரும், ஆசிரியருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையையும் சிந்தனைகளையும் நாம் நினைவுகூர்கிறோம்" என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அனைவருக்கும், குறிப்பாக கடின உழைப்பாளிகளான அனைத்து ஆசிரியர்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியான #ஆசிரியர் தின வாழ்த்துகள்! உள்ளங்களைச் செழுமைப்படுத்துவதில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, வலிமையான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும். அவர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் குறிப்பிடத்தக்கவையாகும். புகழ்பெற்ற அறிஞரும், ஆசிரியருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையையும், சிந்தனைகளையும் நாம் நினைவுகூருகிறோம்."
****
(Release ID: 2164046)
SS/PKV/SG
(रिलीज़ आईडी: 2164192)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam