பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் உற்பத்தித் துறையில் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றகரமான தாக்கத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
प्रविष्टि तिथि:
04 SEP 2025 8:49PM by PIB Chennai
இந்தியாவின் உற்பத்தித் துறையில் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றகரமான தாக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். எளிமைப்படுத்தப்பட்ட வரி அடுக்குகள், சீரமைக்கப்பட்ட டிஜிட்டல் இணக்கம் மற்றும் கட்டண செயல்திறன்கள் முதலியவற்றை அறிமுகப்படுத்தியுள்ள அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக ஊக்குவித்து, போட்டித் தன்மையை மேம்படுத்த உள்ளன.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு பிரகாஷ் தத்லானி வெளியிட்ட பதிவிற்கு பதிலளித்து திரு மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
“அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாற்று சக்தியாகும். 5% மற்றும் 18% என்ற எளிமைப்படுத்தப்பட்ட அடுக்குகளுடன் கூடிய குறைவான உள்ளீட்டுக் கட்டணங்கள், விரைவான டிஜிட்டல் இணக்கம் மற்றும் அதிகரித்து வரும் தேவை முதலியவை, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ பொருட்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.”
*****
(Release ID: 2163932)
AD/BR/SG
(रिलीज़ आईडी: 2164121)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam