மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பால்வளத்துறைக்கு ஊக்கமளிக்கிறது
प्रविष्टि तिथि:
04 SEP 2025 4:37PM by PIB Chennai
நாட்டின் பால்வளத்துறையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக 2025 செப்டம்பர் 03 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இத்துறையில் வரிவிகிதங்களில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பால் பொருட்களுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், சில பால் பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பமூட்டப்பட்ட பால், பன்னீர் போன்றவற்றுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. வெண்ணை, நெய் உள்ளிட்டவற்றுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஐஸ்கீரிமுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என இருதரப்பினருக்கும் பலனளிக்கும். அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும். வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித்தன்மை அதிகரிக்கும். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ள நிலையில், இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை, இத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163730
***
SS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2163858)
आगंतुक पटल : 17