மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஹரியானாவின் சோஹ்னாவில் அதிநவீன லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலை: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் திறந்துவைத்தார்
மின்னணு உதிரி பாகங்கள் அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை - திரு அஸ்வினி வைஷ்ணவ்
Posted On:
04 SEP 2025 4:26PM by PIB Chennai
ஹரியானாவின் சோஹ்னாவில் டிடிகே கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிநவீன லித்தியம் அயன் பேட்டரி தொழிற்சாலையை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதில் மற்றொரு மைல்கல் என்று கூறினார்.
கேமராக்கள், மின்னணு சுற்றுகள், செமிகண்டக்டர்கள், பேட்டரிகள் என அனைத்தையும் வரும் ஆண்டுகளில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதன் மூலம் மின்னணு தொழில்துறையில் இந்தியா தற்சார்பை எட்டும் என்று அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன தொழிற்சாலையில் ஆண்டுக்கு 20 கோடி பேட்டரி தொகுப்புகள் உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறினார். இது உள்நாட்டு தேவையை 40 சதவீதம் பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார்.
இந்த தொழிற்சாலை அரசின் மின்னணு உற்பத்தி தொழில் வழித்தட தொகுப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது 5000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆலையை அமைக்க ஒத்துழைப்பு வழங்கிய ஹரியானா மாநில அரசுக்கு திரு அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163723
***
SS/PLM/AG/KR/DL
(Release ID: 2163836)
Visitor Counter : 2