கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மும்பையில் நடைபெறவுள்ள இந்திய கடல்சார் வார மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்
Posted On:
02 SEP 2025 7:17PM by PIB Chennai
மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறவுள்ள இந்திய கடல்சார் வார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று முக்கிய உரையாற்றுவார் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். குவஹாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு நீர்வழிப் போக்குவரத்து மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவின் கடல்சார் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக இது அமையும் என்றும், ஏற்பட்டுள்ளதாகவும், அம்மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பங்குதாரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
இந்திய கடல்சார் வாரம் மாநாடு சிந்தனைகளின் சங்கமமாக மட்டுமல்லாமல் நம்பிக்கையின் சங்கமமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். நமது கடல்சார் தொலைநோக்கிற்கு பிரதமர் திரு மோடி நமக்கு வழிகாட்டியுள்ளதாகவும், இதனால் உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கைக்குரிய ஒரு கூட்டாளியாகக் காண்பதாகவும் கடல்சார் சக்தியில் நாம் வளர்ந்து வருவதை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய கடல்சார் மாநாட்டின் தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பது, இந்தியாவில் உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் முதலீடு செய்வதற்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார்.
***
(Release ID: 2163161)
SS/IR/KPG/KR
(Release ID: 2163617)
Visitor Counter : 2