பிரதமர் அலுவலகம்
ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
03 SEP 2025 8:40PM by PIB Chennai
ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜோஹன் வதேபுல்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். “இந்தியாவும் ஜெர்மனியும் உத்திசார் கூட்டு முயற்சியின் வெள்ளி விழாவைக் கொண்டாடுகின்றன. துடிப்பான ஜனநாயகங்களாகவும், முன்னணி பொருளாதாரங்களாகவும், வர்த்தகம், தொழில்நுட்பம், புத்தாக்கம், நிலைத்தன்மை, உற்பத்தி மற்றும் இயக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர நலன் பயக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான அபரிமிதமான சாத்திய கூறுகளை நாங்கள் காண்கிறோம்”, என்று திரு மோடி தெரிவித்தார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜோஹன் வதேபுல்-ஐ சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும் ஜெர்மனியும் உத்திசார் கூட்டு முயற்சியின் வெள்ளி விழாவைக் கொண்டாடுகின்றன. துடிப்பான ஜனநாயகங்களாகவும், முன்னணி பொருளாதாரங்களாகவும், வர்த்தகம், தொழில்நுட்பம், புத்தாக்கம், நிலைத்தன்மை, உற்பத்தி மற்றும் இயக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர நலன் பயக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான அபரிமிதமான சாத்திய கூறுகளை நாங்கள் காண்கிறோம். பன்முக உலகம், அமைதி மற்றும் ஐ.நா சீர்திருத்தங்கள் குறித்த ஒரு தொலைநோக்குப் பார்வையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். விரைவில் இந்தியா வருமாறு ஜெர்மனி அதிபருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தேன்.
@_FriedrichMerz”
***
SS/RB/DL
(रिलीज़ आईडी: 2163533)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam