குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 03 SEP 2025 4:30PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (03.09.2025) திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

இந்த விழாவில் உரையாற்றிய அவர், கல்வியில் உயர்தரத்தை இந்தப் பல்கலைக்கழகம் தொடர்ந்து பராமரித்து வருவது அதன் சிறப்பு அம்சமாகும் என்று கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனைகள் மற்றும் அறிவுசார் ஆர்வத்தை வளர்ப்பதற்கான சூழல் ஒருங்கிணைப்பை இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

கல்வியை விரிவாக கற்று கொள்வதன் மூலம் சமுதாயத்தில் கற்றல் தொடர்பான பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்வதில் இப்பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் பணிகள் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சமுதாய கல்லூரிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கார் சீர்மிகு மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் முன் முயற்சிகள் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்கு பங்களிப்பதில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் மகிழ்ச்சித் தெரிவித்தார். சமுதாய மேம்பாட்டுடன், தனிநபர் மேம்பாட்டையும் இணைத்து கல்வி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.  சமுதாயம் பயனடையும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மனிதகுலத்தின் சிறந்த செயல்பாடுகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், வாழ்நாள் முழுவதும் மாணவராக நிலைநிறுத்திகொள்வது மகத்தான செயல் என்று அவர் கூறினார். உதாரணமாக தேசப்பிதா மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் மாணவராகவே இருந்துடன், தமிழ், வங்காளம் போன்ற  மொழிகள், கீதை போன்ற தத்துவங்கள், ராட்டையில் உள்ள சக்கரம் சுழல்வது மற்றும் காலணி உருவாக்கும் திறன் போன்ற பல்வேறு பண்புகளை அவர் கற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். அவரது பண்புகள் குறித்த பட்டியல் முடிவற்றது என்று அவர் கூறினார். அவர் தனது வாழ்நாள் இறுதிவரை சிறந்த செயல்பாட்டுடனும், தனித்துவ சிறப்பு கொண்டிருந்தவராகவும் இருந்தார் என்று கூறினார். தற்போது வாழ்ந்து வரும் அற்புதமான சிந்தனைகளை கொண்ட நபர்களின் அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்து கொள்வதில் தொடர்ந்து கற்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் இணைய தள புரட்சி, உலக அளவில் பல்வேறு புதிய தொழில்முறைகளை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், இந்தத் துறை இவ்வளவு பெரிய வளர்ச்சி அடையும் என்று நினைத்து பார்க்க  முடியாததாக இருந்தது என்று அவர் கூறினார்.  செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை புரட்சி 4.0 ஆகியவை எதிர்காலத்தில் பணி கலாச்சாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை என்று அவர் கூறினார். மாறிவரும் இத்தகைய சூழலில்  புதிய திறனை வளர்த்து கொள்வதன் மூலம் தலைவர்களாக உருவாக முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வலுவான குணநலன் மற்றும் மதிப்பு அடிப்படையிலான வெளிப்படை தன்மையுடன் கூடிய பணிச்சூழலை கட்டமைப்பதே இப்பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரமாக உள்ளது என்று அவர் கூறினார். அறம் சார்ந்த அம்சங்களில் இப்பல்கலைக்கழக மாணவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் இது அவர்களது வாழ்க்கையில் சிறந்த பணிச்சூழலை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.  நாட்டின் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

***

(Release ID: 2163356)

SS/SV/AG/DL


(Release ID: 2163434) Visitor Counter : 5