சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருந்து உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள்: மத்திய அரசு

Posted On: 03 SEP 2025 12:12PM by PIB Chennai

மருந்து உற்பத்தி, மருத்துவ பரிசோதனை ஆய்வுகள் துறைகளைச் சேர்ந்த  நிறுவனங்களின் வர்த்தக நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை குறைப்பது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய சுகாதார அமைச்சகம் புதிய மருந்து உற்பத்தி மற்றும் ஆய்வகப் பரிசோதனை விதிமுறைகள் 2019-ல் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.  முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி மத்திய அரசிதழில் பொதுமக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பரிசோதனைக்கான உரிமங்களைப் பெறுவதில் உள்ள நடைமுறைகள் மற்றும் இதர விதிமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில்  கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் மற்றும் உயிரி சார்ந்த ஆய்வுகள் தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகளும் இதில் அடங்கும்.

இந்த வரைவு திருத்தங்களின்படி பரிசோதனை உரிமங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் தற்போதைய நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் ஆய்வகப்பரிசோதனை உரிமங்களை பெறுவதில் காத்திருக்க வேண்டிய நிலை குறைக்கப்படுவதுடன் ஒட்டுமொத்த சட்ட நடைமுறைகளுக்கான கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 45 நாட்களாக குறைக்கப்படும்.

சிலவகையான உயிரி மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்கான உரிமைகள் பெறுவதிலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுபோன்ற ஒழுங்குமுறை விதிகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் விண்ணப்ப நடைமுறைக்கான கால அவகாசத்தை வெகுவாக குறைக்க உதவுகிறது. மேலும் இந்த திருத்தங்கள் மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் மனிதவளங்களை உகந்தமுறையில் பயன்படுத்துவதற்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் திறன்மிக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் உதவுகிறது.

மருந்து உற்பத்தி துறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை  மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வர்த்தகம் செய்வதற்கான எளிய நடைமுறைகள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளுடன் உள்நாட்டு ஒழுங்குமுறை களை ஒருங்கிணைப்பதன் மூலம் இத்துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163255

***

SS/SV/AG/KR

 


(Release ID: 2163355) Visitor Counter : 2