எஃகுத்துறை அமைச்சகம்
இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 1.45 லட்சம் டன் உற்பத்தி செய்து சாதனை
Posted On:
03 SEP 2025 11:32AM by PIB Chennai
இந்திய மாங்கனீசு தாது நிறுவனம், அதன் ஆகஸ்ட் மாத உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவாக 2025 ஆகஸ்ட் மாதத்தில் 1.45 லட்சம் டன் அளவிலான மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 17 சதவீதம் அதிகமாகும்.
விற்பனையைப் பொறுத்தவரை 2025 ஆகஸ்ட் மாதத்தில் 1.13 லட்சம் டன் மாங்கனீசு தாதுவை நிறுவனம் விநியோகித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 25.6 சதவீதம் அதிகமாகும். மேலும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் 7.92 லட்சம் டன் அளவிற்கு மாங்கனீஸ் தாதுவை உற்பத்தி செய்துள்ளது. 50,621 மீட்டர் ஆழத்திற்கு மாங்கனீஸ் தாது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான வானிலை சூழலுக்கு இடையே உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு இச்சாதனையைப் படைத்ததற்காக இந்திய மாங்கனீசு தாது நிறுவனப் பிரிவுக்கு முதன்மை மேலாண்மை இயக்குநர் திரு அஜீ்த் குமார் சக்சேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2163241)
SS/IR/KPG/KR
(Release ID: 2163308)
Visitor Counter : 5