ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருத்தி கொள்முதல் மையங்களின் செயல்பாடுகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

Posted On: 03 SEP 2025 10:53AM by PIB Chennai

பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில்  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் காரீஃப் பருவத்தில் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை செயல்படுத்துவது தொடர்பான தயார் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்ளும்வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கொள்முதல் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், விவசாயிகளை மையமாகக்கொண்ட சேவையாகவும், குறித்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். பருத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கு ஏற்ப வருவாயை உறுதிசெய்யும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன் பருத்திக்கான சூழல் அமைப்பை டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ள காரீஃப் பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஜவுளித்துறை செயலாளர் திருமதி நீலம் ஷாமி ராவ், செயற்கை இழை உற்பத்தித்துறை இணைச் செயலாளர் திருமதி பத்மினி சிங்ளா, இந்திய பருத்தி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான திரு லலித்குமார் குப்தா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163236

***

SS/SV/AG/KR


(Release ID: 2163261) Visitor Counter : 2