உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஆய்வு
Posted On:
01 SEP 2025 7:24PM by PIB Chennai
ஜம்முவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு சூழ்நிலையை ஆய்வு செய்தார். ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வுப் பணியக இயக்குநர், ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர், மத்திய ஆயுதக் காவல் படைத் (சிஏபிஎஃப்) தலைவர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர், 2025-ம் ஆண்டு ஸ்ரீ அமர்நாத் யாத்திரையை அமைதியாக நடத்துவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு முகமைகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை அவர் வலியுறுத்தினார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து பாதுகாப்பு முகமைகளும் விழிப்புடன் இருந்து, ஒருங்கிணைந்து செயல்படுமாறு அவர் அறிவுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது, பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் வகையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஆற்றிய முக்கிய பங்கை திரு. அமித் ஷா பாராட்டினார். ஜம்மு-காஷ்மீரில் இயற்கை பேரிடர்களை நிர்வகிப்பதில் மத்திய பாதுகாப்புப் படையினரின் முழு ஆதரவையும் அவர் உறுதியளித்தார்.
----
SS/RB/DL
(Release ID: 2162917)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada