உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாத்தில் டயல் 112 –ன் கீழ் மக்கள் பாதுகாப்பாளர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்
Posted On:
31 AUG 2025 10:25PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா குஜராத்தின் அகமதாபாத்தில் டயல் 112-ன் கீழ் தொடங்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாளர்கள் திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல் மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் சங்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மாநில அரசின் உள்துறை, 112 மக்கள் பாதுகாப்பாளர்கள் திட்டத்தின் மூலம் குஜராத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார். இந்த திட்டம் தொடங்கப்பட்டதோடு, குஜராத் காவல்துறை வீட்டுவசதி கழகம் 217 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் அலுவலகங்களையும் திறந்து வைத்துள்ளதாக அவர் கூறினார். தான் பிறந்து வளர்ந்த மான்சா காவல் நிலையம் பிஐஎஸ் சான்றிதழ் பெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர், இந்த டயல் 112 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குமிக்க முன்முயற்சி என்றார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பெரிதும் உதவும் என்றார்.
டயல் 112 மக்கள் பாதுகாப்பாளர்கள் திட்டம் மாநில அரசின் அவசர சேவை மையத்தின் மூலம் 24X7 செயல்படும் என்று திரு அமித் ஷா கூறினார். காவல்துறையை ஸ்மார்ட் காவல் அமைப்பில் இணைக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை குஜராத் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத்தின் கடல் எல்லை பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய பல சம்பவங்கள் குஜராத்தின் எல்லை வழியாக நடந்தன. ஆனால், திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சரான பிறகு, மாநிலத்தின் எல்லையை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பானதாக மாறியுள்ளது என்று கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் இந்தியாவின் இராணுவம் மற்றும் எல்லைப் பகுதிகளில் எந்த வகையிலும் தலையிட முடியாது என்பது நிறுவப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். மோடி அரசு ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய பயங்கரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வடகிழக்கு பிராந்தியம், நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகள் மற்றும் காஷ்மீர் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளிலும் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு மோடி அரசு தகுந்த பாடம் கற்பித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மார்ச் 31, 2026-க்குள் நாட்டில் இருந்து நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்பதே மோடி அரசின் உறுதியான முடிவு என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அகமதாபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் அங்குள்ள குலதெய்வம் ஸ்ரீ பத்ரகாலி மாதாவின் பழமையான கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். 'சர்தார் பாக்' என்ற பூங்காவையும் அவர் திறந்து வைத்தார்.
***
(Release ID: 2162546)
AD/EA /KR
(Release ID: 2162743)
Visitor Counter : 4