தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஃப்ரீடம் பிளான் மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது
प्रविष्टि तिथि:
01 SEP 2025 1:42PM by PIB Chennai
வாடிக்கையாளர்களின் வரவேற்பை அடுத்து “ஃப்ரீடம் பிளான்” என்ற மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. ஆகஸ்ட் 1 அன்று, ஒரு ரூபாய் கட்டணத்தில் புதிய செயல்பாட்டுகளுக்கு 30 நாட்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2025 ஆகஸ்ட் 31-ம் தேதி வரையிலான செயல்பாட்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இச்சலுகை 2025 செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, எண்ணற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 2ஜிபி அதிவேக இணையதள சேவை, 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி மற்றும் கட்டணமில்லாத சிம் கார்டு ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162612
---
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2162648)
आगंतुक पटल : 17