ஆயுஷ்
தேசிய ஆயுஷ் இயக்கமும் மாநிலங்களில் திறன் மேம்பாடும் என்ற துறைசார் உச்சி மாநாடு - செப்டம்பர் 3, 4 தேதிகளில் ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது
प्रविष्टि तिथि:
31 AUG 2025 9:18AM by PIB Chennai
"தேசிய ஆயுஷ் இயக்கமும் மாநிலங்களில் திறன் மேம்பாடும்" என்ற கருப்பொருளில் இரண்டு நாள் துறைசார் உச்சி மாநாட்டை 2025 செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் புது தில்லியில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சிமாநாட்டிற்கு மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை வகிக்கவுள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில், மாநில அரசுகளின் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறும். இது அடித்தட்டு அளவிலான உள்ளீட்டுக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக அமையும். இத்தகைய பங்கேற்பு அணுகுமுறை தேசிய ஆயுஷ் இயக்கத்தை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் உதவும். இது ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான சுகாதாரப் பராமரிப்பை ஊக்குவிக்கும் ஒரு முதன்மை அணுகுமுறையாகும்.
இதுபோன்ற உச்சிமாநாடுகள், மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து, முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தி, அதில் விவாதங்களை நடத்துகின்றன. மேலும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க இளம் அதிகாரிகள் உட்பட அனைத்து நிலைகளிலும் பங்கேற்பை ஊக்குவிக்கின்றன.
***
(Release ID: 2162389)
AD/PLM/SG
(रिलीज़ आईडी: 2162433)
आगंतुक पटल : 11