பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஜப்பான் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு

Posted On: 29 AUG 2025 8:12PM by PIB Chennai

நமது பகிரப்பட்ட மதிப்புகளிலும் பரஸ்பர மரியாதையிலும் உறுதியாக அடித்தளமிடப்பட்டுள்ள இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பு, இரு நாடுகளின் பாதுகாப்பையும் செழிப்பையும் அதிகரிக்க மிகவும் முக்கியமானது. பொருளாதார பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு என்பது நமது உத்திசார் கண்ணோட்டத்தில் வெளிப்படும் முக்கிய தூணாகும்.

இரண்டு துடிப்பான ஜனநாயகங்களான இந்தியாவும் ஜப்பானும் நமது அரசியல் நம்பிக்கை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முக்கியமான துறைகளில் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ளன.

● இந்தியாவும் ஜப்பானும் 2024 நவம்பரில் துணை வெளியுறவு அமைச்சர்/வெளியுறவுச் செயலாளர் நிலையில் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்த இந்தியா-ஜப்பான் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றைத் தொடங்கின.

●  பொருளாதாரப் பாதுகாப்பு குறித்த உரையாடல் மூலம், இந்தியாவும் ஜப்பானும், முக்கிய சவால்கள் குறித்த கொள்கை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டன.

● இந்தியாவும் ஜப்பானும், வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு தடைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்டவற்றில் இருதரப்பு செயல்பாடுகளை மேம்படுத்தத் தீர்மானித்தன.

● இந்தியாவும் ஜப்பானும் செமிகண்டக்டர், முக்கியமான கனிமங்கள், மருந்துகள், தூய எரிசக்தி, தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளன.

● இரு நாடுகளின் தேசிய பொருளாதார நலன்களுக்காக தனியார் துறை தலைமையிலான முயற்சிகளை இந்திய - ஜப்பான் அரசுகள் ஆதரிக்கின்றன.

● கெய்டன்ரென் (ஜப்பான் வணிகக் கூட்டமைப்பு) - இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) இடையே பொருளாதாரப் பாதுகாப்பு குறித்த இந்தியா-ஜப்பான் தனியார் துறை உரையாடல் தொடங்கப்பட்டதை இந்தியாவும் ஜப்பானும் வரவேற்றன.

செமிகண்டக்டர்:

● செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, ஜூலை 2023-ல், இந்திய மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஜப்பானின் தொழில்துறை அமைச்சகமும் இந்தியா-ஜப்பான் குறைக்கடத்தி விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

● செமிகண்டக்டர் துறையில் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து குறைக்கடத்தி கொள்கை உரையாடலின் கீழ் இந்தியாவும் ஜப்பானும் கூட்டங்களை நடத்தின.

முக்கிய கனிமங்கள்

● கனிம பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு, குவாட் முக்கிய கனிமங்கள் அமைப்பு ஆகிய முன்முயற்சிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுகின்றன.

● ஆகஸ்ட் 2025-ல் கனிம வளத்துறை தொடர்பாக இந்தியாவும் ஜப்பானும் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

● அரிய மண் பொருட்களுக்கான நிலையான விநியோகச் சங்கிலியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட டொயோட்டா சுஷோவின் அரிய மண் சுத்திகரிப்புத் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன.

தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்

● இந்திய தொலைத் தொடர்பு அமைச்சகமும் ஜப்பான் தொலைத் தொடர்பு அமைச்சகமும் மே 2022-ல், 7-வது இந்திய-ஜப்பான் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை நடத்தின. இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

தூய எரிசகத்தி

● ஆகஸ்ட் 2025-ல் நடைபெற்ற 11வது இந்தியா-ஜப்பான் எரிசக்தி உரையாடலின் கூட்டு அறிக்கையை இந்தியாவும் ஜப்பானும் வரவேற்றன.

● கூட்டு கடன் வழங்கும் செயல்முறை தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இந்தியாவும் ஜப்பானும் வரவேற்றன.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற சர்வதேச கூட்டமைப்புகள் மூலம் உயிரி எரிபொருட்களில் இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஒத்துழைப்பைத் தொடரும்.

அறிவியல் ஒத்துழைப்பு

● இந்த ஆண்டை அறிவியல், தொழில்நுட்பம், புதுமை பரிமாற்ற ஆண்டாக கொண்டாடும் வகையில் இந்தியாவும் ஜப்பானும் தங்கள் அறிவியல் - தொழில்நுட்ப ஈடுபாட்டை ஆழப்படுத்துகின்றன.

● ஜூன் 2025-ல் இந்தியாவும் ஜப்பானும் அறிவியல் - தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 11வது கூட்டுக் குழு கூட்டத்தை நடத்தின. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், உயிரி தொழில்நுட்பம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள், விண்வெளி போன்ற புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முழு அளவிலான அறிவியல் ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளும் விவாதித்தன.

ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்:

உலகளாவிய சவால்கள் உருவாகி வரும் பின்னணியில் முக்கியமான பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் பகிரப்பட்ட ஆர்வத்தை அங்கீகரித்தல், பொருளாதார பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு உறுதியளித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும், அதற்கு அப்பாலும் விதிகள் சார்ந்த பொருளாதார ஒழுங்குக்கான பொதுவான பார்வையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

***

(Release ID: 2162043)

AD/PLM/RJ


(Release ID: 2162216)