இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று பட்டங்களை வென்ற இளம் கால்பந்து வீரர்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு
Posted On:
28 AUG 2025 6:54PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று (28 ஆகஸ்ட் 2025) புதுதில்லியில் மொஹாலியில் உள்ள மினெர்வா அகாடமி கால்பந்து கிளப்பின் இளம் கால்பந்து வீரர்களைப் பாராட்டி, ஐரோப்பா முழுவதும் அவர்கள் பெற்ற வெற்றிகள், இந்திய கால்பந்தின் புதிய தொடக்கமாகக் கருதப்படுகின்றன என்று தெரிவித்தார்.
22 வீரர்களைக் கொண்ட 14/15 வயதுக்குட்பட்ட அணி, 2025 ஜூலை-ஆகஸ்ட்டில் இதுவரை எட்டாத ஐரோப்பிய ட்ரெபிள் சாதனையைப் படைத்து, கோதியா கோப்பை (ஸ்வீடன்), டானா கோப்பை (டென்மார்க்) மற்றும் நார்வே கோப்பை (நார்வே) ஆகியவற்றை வென்று வரலாறு படைத்தது.
"சர்வதேச அரங்கில் அதிக பெருமை அடைய வேண்டும் என்ற நமது தேடலில் இந்திய கால்பந்துக்கு இது ஒரு புதிய தொடக்கமாகும்" என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
இளம் விளையாட்டு வீரர்கள் எங்கு பங்கேற்றாலும், 'தேசம் முதலில்' என்பதை மனதில் கொள்ளுமாறு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். "உளவியலாளர்கள் மூலம் இந்த இளைஞர்களின் விளையாட்டு அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் மன உறுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இது இந்தியாவை வெற்றிப் பாதையில் வைத்திருக்கும். இந்த இளைஞர்கள் தங்கள் உயர்ந்த தன்னம்பிக்கை நிலையையும், விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் பராமரிக்க வேண்டும்," என்று டாக்டர் மாண்டவியா மேலும் கூறினார்.
இந்தப் போட்டிகள் உலகின் மிகவும் மதிப்புமிக்க மூன்று இளைஞர் கால்பந்து போட்டிகளாகக் கருதப்படுகின்றன. தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர் கிளப்புகளுக்கு எதிராக வியக்கத்தக்க வகையில் 295 கோல்களை அடித்த அதே வேளையில், ஒரு சில கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அணி 26 சர்வதேச போட்டிகளில் தோற்காமல் இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161639
***
(Release ID: 2161639)
AD/BR/KR
(Release ID: 2161787)
Visitor Counter : 8