பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மேஜர் தியான் சந்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்

Posted On: 29 AUG 2025 8:39AM by PIB Chennai

புகழ் பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தியான் சந்திற்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரிணமித்து வரும் விளையாட்டுத் தளத்தைப் பிரதிபலித்துள்ள பிரதமர், விளையாட்டு மற்றும் உடல்தகுதி கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான அரசின் அர்ப்பணிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு நிறுவன ரீதியான ஆதரவை வலுப்படுத்துதல், நாடு முழுவதும் நவீன பயிற்சி மற்றும் போட்டி தளங்களின் அணுகலை விரிவுப்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் இன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள்! இந்த சிறப்பான தருணத்தில் தலைமுறைகள்தோறும் தொடர்ந்து மிகச் சிறந்த ஊக்கத்தை அளித்து வரும் மேஜர் தியான் சந்திற்கு நாம் புகழாரம் சூட்டுவோம்.

கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் விளையாட்டுத் தளம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. உலகத்தரத்திலான வசதிகளை உருவாக்க அடித்தள நிலையிலான திட்டங்கள் மூலம் இளம் திறமையாளர்களை வளர்த்து வருகிறோம். நமது நாட்டில் துடிப்பு மிக்க விளையாட்டுச் சூழலை நாம் காண்கிறோம். விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கவும், அடிப்படை கட்டமைப்பை உருவாக்கவும், விளையாட்டு மேன்மைக்கு உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றவும் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.”

***

(Release ID: 2161734)

AD/SMB/SG/KR

 


(Release ID: 2161781) Visitor Counter : 28