ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேத தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது

Posted On: 26 AUG 2025 3:17PM by PIB Chennai

ஆயுர்வேத தினம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்படும் என்று 2025 மார்ச் மாதத்தில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. முன்னதாக ஆயுர்வேத தினம் தன்வந்திரி ஜெயந்தி தினத்தன்று கொண்டாடப்பட்டது.

உலக அளவில் ஆயுர்வேதத்திற்கு அடையாளம் கிடைக்கும் வகையில், இந்தக் குறிப்பிட்ட தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் பூமிக்காக ஆயுர்வேதம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு  கொண்டாட்டம் நடைபெறும் என்று தெரிவித்த மத்திய ஆயுஷ், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், ஆயுர்வேதம் என்பது வெறும் சுகாதார முறையல்ல, தனிநபர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையேயான நல்லிணக்கக் கொள்கைகளில் வாழ்க்கையே அறிவியலாகும் என்று தெரிவித்தார்.

ஆயுஷ் துறை செயலாளர் திரு வைத்தியா ராஜேஷ் கொட்டேச்சா பேசிய போது, ஆயுர்வேத தினம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், இந்தியாவின் பாரம்பரிய அறிவைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக இத்தினம் உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160853

***

AD/IR/KPG/SG/DL


(Release ID: 2161014)