மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஆசிரியர் விருதுக்கு 21 பேரை உயர்கல்வித்துறை தேர்ந்தெடுத்துள்ளது

தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் சங்கரன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Posted On: 26 AUG 2025 4:37PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, உயர் கல்வி நிறுவனங்கள், தொழில்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 21 ஆசிரியர்களை தேசிய ஆசிரியர்கள் விருது 2025-க்கு தேர்ந்தெடுத்துள்ளது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டடக்கலை, கணிதம், இயல் அறிவியல், உயிரி அறிவியல், வேதி அறிவியல், மருத்துவம், மருந்து, கலை மற்றும் சமூக அறிவியல், மொழியியல், சட்டப்படிப்பு, வணிகவியல், மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக  பேராசிரியர் சங்கர் ஸ்ரீராம் சங்கரனும், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் சிவ சத்தியாவும் தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160872

***

AD/IR/KPG/SG/DL


(Release ID: 2160964)