பிரதமர் அலுவலகம்
திரு. விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
24 AUG 2025 7:48PM by PIB Chennai
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினரும், ராஜ்சதன் அயோத்தியின் தலைவருமான திரு விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா தனது வாழ்க்கையை மத மற்றும் சமூக நோக்கங்களுக்காக அர்ப்பணித்ததாக பிரதமர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினரும், ராஜ்சதன் அயோத்தி தலைவருமான திரு விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ராவின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது வாழ்க்கை, மத மற்றும் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. தமது தாமரைப் பாதங்களில் அவருக்கு இடம் அளிக்கவும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் வலிமை அளிக்கவும் நான் ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!”
***
(Release ID: 2160376)
AD/RB/RJ
(Release ID: 2160531)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam