இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய இளையோர் விருதுகள் 2024-க்கு ஆன்லைன் வாயிலாக செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அழைப்பு
Posted On:
25 AUG 2025 1:44PM by PIB Chennai
தேசிய இளையோர் விருதுகள் 2024-க்கு விண்ணப்பிக்குமாறு மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. 19 வயது முதல் 29 வயதுடைய இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய மேம்பாடு அல்லது சமூக சேவைகளில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. சிறந்த குடிமகனாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் வகையிலும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இத்துறையில் பணியாற்றிய தன்னார்வ நிறுவனங்களின் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசிய இளையோர் திருவிழாவின் போது வழங்கப்படும் இந்த விருதுகள் இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. 1) தனிநபர் விருது, 2 நிறுவனங்களுக்கான விருது.
தனிநபர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் 20 எண்ணிக்கைக்கு மிகாமலும் நிறுவனங்களுக்கு 5 விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தனி நபர்களுக்கான விருதில் ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான ரொக்கப்ப பரிசும் அடங்கும் . தன்னார்வ நிறுவனங்களுக்கான விருதில் ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் 3 லட்சம் ரூபாய்க்கான ரொக்கப்பரிசும் அடங்கும்.
இந்த விருதுகளுக்காக https://awards.gov.in. என்ற இணையதள முகவரியில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், கலாச்சாரம், மனித உரிமைகள் ஊக்குவிப்பு, கலை, இலக்கியம், சுற்றுலா, பாரம்பரிய மருத்துவமுறை, சிறந்த குடிமகன், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160502
***
AD/SV/KPG/RJ
(Release ID: 2160525)