சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொச்சியில் நாட்டுப்புற கலாச்சார விழா நாளை தொடங்குகிறது

Posted On: 25 AUG 2025 11:28AM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், கேரளாவின் கொச்சியில் உள்ள சண்முகம் சாலையில் உள்ள மரைன் டிரைவ் மைதானத்தில் 5-வது நாட்டுப்புற கலாச்சார விழாவை ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 4, 2025 வரை நடத்துகிறது. இந்த நிகழ்வை மத்திய சிறுபான்மையினர் நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் நிரு ஜார்ஜ் குரியன் தொடங்கி வைக்கிறார்.

நாட்டுப்புற கலாச்சார விழா என்பது அமைச்சகத்தின் ஒரு முதன்மை முயற்சியாகும், இது கைவினைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு சந்தை இணைப்புகளை வழங்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கலை, கைவினை மற்றும் திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், இந்த விழா  பொருளாதார அதிகாரமளிப்பை வலுப்படுத்துவதோடு இந்தியாவின் துடிப்பான பன்முகத்தன்மையையும் கொண்டாடுகிறது. இது கேரளாவின் முதல் நாட்டுப்புற கலாச்சார விழா என்பதால்முக்கியத்துவம் பெறுகிறது.

10 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழா நாடு முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களையும் 15 சமையல் நிபுணர்களையும் ஒன்றிணைக்கும். உத்தரபிரதேசத்தின் சாரி மற்றும் சிக்கன்காரி, பஞ்சாபின் புல்காரி பின்னல் வேலை, பீகாரின் மதுபனி ஓவியங்கள், ராஜஸ்தானின் நீல மண்பாண்டங்கள் முதல் லடாக்கிலிருந்து பஷ்மினா நெசவு, சத்தீஸ்கரின் பஸ்தர் இரும்பு கைவினைப் பொருட்கள், கர்நாடகாவின் சன்னபட்னா மர பொம்மைகள், கேரளாவின் நெட்டிப்பட்டம் தயாரித்தல் வரை பாரம்பரிய கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். பாரம்பரிய உணவுகள், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், பேக்கரி பொருட்கள், மூலிகை தயாரிப்புகள் மற்றும் கடல் உணவு வகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான உணவு வகைகளையும்  பார்வையாளர்கள் ருசிக்கலாம். கண்காட்சியுடன், சிறுபான்மை சமூகங்களின் வளமான கலை பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி செயல் விளக்கங்கள்  இந்த விழாவில் நடைபெறும்.

தில்லி மற்றும் ஸ்ரீநகரில் நடைபெற்ற முந்தைய விழாக்கள்  மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டன, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவித்ததற்காக பாராட்டைப் பெற்றன. கொச்சி பதிப்பு இந்தப் பாரம்பரியத்தை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 2160450)

AD/PKV/RJ


(Release ID: 2160515)