தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயற்குழு வாரியத் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
Posted On:
22 AUG 2025 5:44PM by PIB Chennai
ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் வாரியத் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் இம்மாதம் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற இந்நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தில் அதிகபட்ச வாக்குகளுடன் இந்தியா அந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி திரு கௌரவ் திவேதி மற்றும் ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் தங்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்காக இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் பேசிய பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி திரு கெளரவ் திவேதி, கடந்த 50 ஆண்டுகளாக இந்த அமைப்புடன் பல்வேறு நிலைகளில் ஒரு குழுவாக பணியாற்றி வந்ததாகவும், இந்த அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.
கடந்த 2016-ம் ஆண்டில் இந்த அமைப்பின் செயற்குழுத் தலைவராக இந்தியா பொறுப்பேற்று வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159841
***
AD/SV/KPG/KR/DL
(Release ID: 2159898)