நிதி அமைச்சகம்
நாடு முழுவதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 72 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
Posted On:
22 AUG 2025 3:42PM by PIB Chennai
இந்தியாவிற்குள் கடத்தப்படுவதாக இருந்த நீரில் வளரக்கூடிய போதை தரும் தாவர வகைகளைத் தடுக்க நாடு முழுவதிலும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பெங்களூரு மற்றும் போபால் ரயில் நிலையங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 2 பயணிகளிடமிருந்து 29.88 கிலோ எடை கொண்ட போதைச் செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போபாலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 24.186 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தில்லியைச் சேர்ந்த ஒருவரை சுற்றி வளைத்த அதிகாரிகள் அவரிடமிருந்து 1.02 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், தாய்லாந்திலிருந்து இம்மாதம் 20-ம் தேதி பெங்களூரு வந்த பயணியிடமிருந்து 17.958 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு 72 கோடி ரூபாயாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159766
***
AD/SV/KPG/KR
(Release ID: 2159849)