பிரதமர் அலுவலகம்
பயிற்சி முடித்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள், பிரதமருடன் சந்திப்பு
Posted On:
19 AUG 2025 8:34PM by PIB Chennai
2024-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் பயிற்சி முடித்த அதிகாரிகள் தில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 33 இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
இந்தியாவின் தனித்துவ தன்மை கொண்ட விஸ்வபந்து என்பது அனைவருடனும் நட்புறவை உறுதி செய்வது குறித்தும், உலகின் தற்போதைய பன்முகத்தன்மை கொண்ட விவகாரங்கள் குறித்தும் பயிற்சியை நிறைவு செய்த வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நாட்டிற்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா எவ்வாறு உருவெடுத்துள்ளது என்பது குறி்த்து அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். வளரும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும் திறன் மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் அப்போது அவர் விரிவாக விளக்கினார்.
நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் உலக அரங்கில் அதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் விவரித்தார். உலக அரங்கில் விஸ்வபந்து என்ற நிலையில், நாட்டின் வளர்ந்து வரும் சூழல் குறித்து எடுத்துரைப்பதில் தூதரக அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் எதிர்கால தூதரக அதிகாரிகள் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
***
(Release ID: 2158154 )
AD/SV/KPG/KR
(Release ID: 2158951)
Read this release in:
Gujarati
,
Malayalam
,
Bengali
,
Manipuri
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada