பாதுகாப்பு அமைச்சகம்
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படையின் 5 வீரர்களுக்கு தத்ரக்ஷக் பதக்கங்கள் வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல்
Posted On:
14 AUG 2025 7:02PM by PIB Chennai
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படையின் 5 வீரர்களுக்கு தத்ரக்ஷக் பதக்கங்கள் வழங்க குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். வீரர்களின் துணிச்சலான செயல்பாடுகள், கடமையில் தனித்துவமான அர்ப்பணிப்பு மற்றும் போற்றத்தக்க சேவை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. விருது பெறுபவர்களின் பட்டியல் பின்வருமாறு:
தத்ரக்ஷக் பதக்கம் (வீரதீர செயல்)
1. கமாண்டன்ட் ஸ்ரீனிவாஸ் கடம்
2. கமாண்டன்ட் (ஜே.ஜி) அங்கித் ஷர்மா
3. கமாண்டன்ட் (ஜே.ஜி) ராஜ்கமல் அட்றி
தத்ரக்ஷக் பதக்கம் (பாராட்டத்தக்க சேவை)
1. காவல்துறை தலைவர் அனுபம் ராய்
2. காவல்துறை துணைத் தலைவர் பிபூதி ரஞ்சன்
****
(Release ID: 2156514)
SS//RB/RJ
(Release ID: 2156735)