குடியரசுத் தலைவர் செயலகம்
சிங்கப்பூர் துணைப் பிரதமர் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், குடியரசுத்தலைவரை சந்தித்தார்
Posted On:
13 AUG 2025 6:33PM by PIB Chennai
சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான திரு. கான் கிம் யோங் தலைமையில் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ள அமைச்சர்கள் குழுவினர், இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (ஆகஸ்ட் 13, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர். இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் (ஐஎஸ்எம்ஆர்) மூன்றாவது வட்டமேசை கூட்டத்திற்காக இந்தக் குழு தில்லி வந்துள்ளது.
குடியரசுத்தலைவர் மாளிகையில் தூதுக்குழுவை வரவேற்ற குடியரசுத்தலைவர், நிச்சயமற்ற உலகளாவிய சூழலிலும், இந்தியா-சிங்கப்பூர் இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மை வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில், இருதரப்பு உறவுகள் நிறுவப்பட்டதன் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிபர் திரு தர்மன் சண்முகரத்னம் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தை அவர் அன்புடன் நினைவு கூர்ந்தார். இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை கூட்டம் (ஐஎஸ்எம்ஆர்) உட்பட உயர் மட்டங்களில் இதுபோன்ற வழக்கமான தொடர்புகள் இருநாடுகளின் பன்முக உறவுகளுக்கு தொடர்ச்சியான உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக சிங்கப்பூரின் வலுவான நிலைப்பாட்டை குடியரசுத்தலைவர் பாராட்டினார்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டு கொள்கை , மகாசாகர் தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் சிங்கப்பூர் ஒரு முக்கிய அங்கம் வகிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் வலுவான கூட்டாண்மைகள் உள்ளன. இந்தக் கூட்டாண்மை இப்போது திறன் மேம்பாடு, பசுமை பொருளாதாரம் மற்றும் நிதிநுட்பம் போன்ற வளர்ந்து வரும் ஒத்துழைப்புத் துறைகளிலும் விரிவடைந்து வருவது திருப்தி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
-----
(Release ID: 2156140)
AD/RB/DL
(Release ID: 2156235)