பிரதமர் அலுவலகம்
ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு
உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அதிபர் திரு புடின் பிரதமருக்கு விளக்கினார்
மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்
இந்தியா, ரஷ்யா இடையேயான சிறப்பு, முன்னுரிமை உத்திசார் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்
வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டிற்காக இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருமாறு அதிபர் திரு புடினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Posted On:
08 AUG 2025 6:31PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் மாண்புமிகு திரு. விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அதிபர் திரு புடின் பிரதமருக்கு விளக்கினார்.
விரிவான மதிப்பீட்டிற்காக அதிபர் திரு புடினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர். மேலும் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பு, முன்னுரிமை உத்திசார் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
23வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வருமாறு அதிபர் திரு புடினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
-----
AD/RB/DL
(Release ID: 2154496)