குடியரசுத் தலைவர் செயலகம்
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2025 4:26PM by PIB Chennai
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் பண்டிகை அன்பின் தனித்துவமிக்க பிணைப்பையும், சகோதர சகோதரிகளுக்கு இடையே நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பண்டிகை சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பண்டிகை நம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154142
-----
SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2154446)
வருகையாளர் எண்ணிக்கை : 15