பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பொதுச்சேவைக்கான நமது உறுதியான அர்ப்பணிப்பை கடமை மாளிகை பிரதிபலிக்கிறது: பிரதமர்

வளாகங்களில் மரக்கன்றுகளையும் பிரதமர் நட்டுவைத்தார்; சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் குறித்தும் எடுத்துரைத்தார்

Posted On: 06 AUG 2025 3:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது பொதுச் சேவைக்கான தொடர் முயற்சிகள் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று அவர் குறிப்பிட்டார்.

கொள்கைகள் மற்றும் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தையும் கடமை மாளிகை அளிக்கும் என்று அவர் கூறினார்.

வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை கடமைப்பாதை பிரதிபலிக்கிறது என்று திரு மோடி கூறினார். இன்று, அதை வடிவமைத்த நமது கட்டடத் தொழிலாளிகளின் அயராத கடின உழைப்பையும் உறுதியையும் நாடு கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  அவர்களுடன் கலந்துரையாடும்போது தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தி இந்த கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"கடமைப் பாதையில் உள்ள கடமை மாளிகை, மக்களுக்கு சேவை செய்வதற்கான நமது அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் சின்னமாகும். இது நமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு விரைவாக அளிக்க உதவுவது மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அளிக்கும். அதிநவீன உள்கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த கட்டடத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்."

"டமை மாளிகை, வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இன்று, அதை வடிவமைத்த நமது கட்டடத் தொழிலாளிகளின் அயராத கடின உழைப்பையும் உறுதியையும் நாடு கண்டுள்ளது. அவர்களுடன் உரையாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."

"டமை மாளிகையை கட்டும் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அதன் வளாகத்தில் ஒரு மரக்கன்றை நடுவதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது."

***

(Release ID: 2152979)
AD/IR/AG/KR

 


(Release ID: 2153139)