ரெயில்வே அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பாவ்நகரில் உள்ள ஒரு கொள்கலன் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டார்.
Posted On:
03 AUG 2025 8:14PM by PIB Chennai
மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகத் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் பம்பானியா ஆகியோர் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்கலன் உற்பத்தி நிறுவனமான ஆவத்க்ருபா பிளாஸ்டோமெக் பிரைவேட் லிமிடெட்டைப் பார்வையிட்டனர்.
பாவ்நகர்–ராஜ்கோட் சாலையில் அமைந்துள்ள ஆவத்க்ருபா பிளாஸ்டோமெக் பிரைவேட் லிமிடெட்டில் தயாரிக்கப்படும் கொள்கலன்கள் பற்றிய விரிவான தகவல்களை மத்திய அமைச்சர் சேகரித்து, தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
பாவ்நகர் இப்போது ஒரு கொள்கலன் மையமாக மாறுவதை நோக்கி நகர்கிறது. பாவ்நகரின் நவகத்தில் அமைந்துள்ள கொள்கலன் உற்பத்தி நிறுவனம், தற்போது உத்தரவுகளின்படி ஒரு நாளைக்கு சுமார் 15 கொள்கலன்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது நிறுவனம் தினமும் 100 கொள்கலன்கள் வரை உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ரயில்வே அமைச்சர், முழு கொள்கலன் உற்பத்தி செயல்முறையையும், தொழில்நுட்பத்தையும் உன்னிப்பாக ஆய்வு செய்தா.ர் மேலும் எதிர்காலத்தில் கொள்கலன்களுக்கான அதிகரித்து வரும் உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய அரசிடமிருந்து தேவையான அனைத்து ஆதரவையும் நிறுவனம் பெறும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மணீஷ் குமார் பன்சால், மாவட்ட வளர்ச்சி அதிகாரி திரு. ஹனுல் சவுத்ரி, பிராந்திய ஆணையர் திரு. தவால் பாண்டியா, காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷத் படேல், ஆவத்க்ருபா பிளாஸ்டோமெக் பிரைவேட் லிமிடெட்டின் திரு. ஹஸ்முக்பாய் படேல் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2151986
***
(Release ID: 2151986)
AD/BR/KR
(Release ID: 2152014)