தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் 4-வது தொழில் புரட்சியை விரைவுபடுத்தும் வகையில் பிஎஸ்என்எல் மற்றும் என்ஆர்எல் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 03 AUG 2025 10:42AM by PIB Chennai

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தையும் தொழில்துறை நவீனமயமாக்கலையும் விரைவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL - பிஎஸ்என்எல்) மற்றும் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL - என்ஆர்எல்) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. குவஹாத்தியில் நிதி அமைச்சகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கான 4-வது தொழில் புரட்சி தொடர்பான பயிலரங்கின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் பயிலரங்கில் நிதி அமைச்சகம் மற்றும் பல்வேறு மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர் . புதுமை, செயல்திறன் தற்சார்பு ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் 4-வது தொழில் புரட்சிக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களை (CPSE) மேம்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பிஎஸ்என்எல் மற்றும் என்ஆர்எல் ஆகியவை இந்தியாவின் முதல் 5ஜி சிஎன்பின் (கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க்)- சுத்திகரிப்புத் துறையில் பயன்படுத்த ஒத்துழைக்கும் இது பாதுகாப்பான, மிகவும் நம்பகமான தொழில்துறை இணைப்பின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும்.

5ஜி சிஎன்பிஎன், ஒருங்கிணைப்பு செயல்பாட்டுத் திறனை மற்றும் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஏஆர்/விஆர்- அடிப்படையிலான பயிற்சி , டிஜிட்டல் ட்வின்ஸ் மற்றும் நிகழ்நேர ஐஓடி பயன்பாடுகள் போன்ற மாற்றத்தக்க தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தும் என்று என்ஆர்எல் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் கூறினார் . இந்தியாவின் சுத்திகரிப்புத் துறைக்கு இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் என்று அவர் தெரிவித்தார்.

"இந்தியாவின் உத்திசார் துறைகளை அடுத்த தலைமுறை டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் மேம்படுத்துவதில் பிஎஸ்என்எல்-ன் உறுதிப்பாட்டை இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுகிறது என்று பிஎஸ்என்எல்-ன் தலைவர் திரு. . ராபர்ட் ஜே ரவி குறிப்பிட்டார். .

***

(Release ID: 2151904)

AD/SM/PLM/RJ


(Release ID: 2151913)