விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் 20ஆவது தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் உரை.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.3,77,000 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.
Posted On:
02 AUG 2025 2:12PM by PIB Chennai
பீகார் மாநிலம் பாட்னாவில் விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்ட பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் 20ஆவது தவணை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பீகார் துணைமுதல்வர் திரு விஜய் சின்ஹா, கூட்டுறவு அமைச்சர் திரு பிரேம்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளை அதிலும் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெண் விவசாயிகளை அவர்களது கடின உழைப்பிற்காகவும் பங்களிப்பிற்காகவும் அமைச்சர் பாராட்டினார். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்வதாகவும் அதன் ஆன்மாவாக விவசாயிகள் விளங்குவதாகவும் அமைச்சர் பாராட்டினார்.
விவசாயத்தை லாபகரமானதாக ஆக்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.3,77,000 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இன்று சுமார் ரூ.20,000 கோடி நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களுக்கு நிதிஉதவி அளிக்கும் வகையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
விவசாய உற்பத்தி குறைவாக உள்ள பகுதிகளில் விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதமரின் தன் தானிய திட்டம் போன்ற முயற்சிகளை அமைச்சர் திரு சௌகான் எடுத்துக்காட்டினார். பீகாரில் மக்கானா உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதை குறிப்பிட்டுக் காட்டிய அமைச்சர் வேளாண் அறிவியலை பண்ணைகளோடு இணைப்பதற்கான தொடர்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விவசாயிகளின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கூறிய அமைச்சர் திரு சௌகான் நேரடிப் பலன்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகைகள் நேரடியாகச் சென்று சேர்வதை அரசு உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டார்.
****
(Release ID: 2152701)
AD/TS/RJ
(Release ID: 2151868)