தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; பார்க்கிங் தமிழ் திரைப்படத்திற்கு 3 விருதுகள்
Posted On:
01 AUG 2025 7:41PM by PIB Chennai
71வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழு இன்று, 2023 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை அறிவித்தது. இதன்படி ‘பார்க்கிங்’ தமிழ் திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த துணை நடிகர் விருது (திரு எம்.எஸ்.பாஸ்கர்) மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருது (திரு ராம்குமார் பாலகிருஷ்ணன்) ஆகியவற்றை இந்தத் திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, ‘வாத்தி’ தமிழ் திரைப்படத்திற்காக திரு ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, புனைவு அல்லாத திரைப்படங்கள் (Non-Feature Films) பிரிவில் தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்ஸ், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது.
விருதுகள் குறித்த அறிவிப்புக்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களின் பட்டியலை திரைப்பட நடுவர் மன்றத்தின் தலைவர் திரு அசுதோஷ் கோவரிகர், திரைப்படம் அல்லாத நடுவர் மன்றத்தின் தலைவர் திரு பி. சேஷாத்ரி, ஜே.எஸ் (ஃபிலிம்ஸ்) இன் டாக்டர் அஜய் நாகபூஷன் எம் என் ஆகியோர் அறிவித்தனர். பத்திரிகை தகவல் அலுவலக தலைமை இயக்குநர் திருமதி மட்டு ஜே பி சிங் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு, விருதுகளுக்கு மொத்தம் 332 திரைப்படப் பதிவுகள், 115 புனைவு அல்லாத திரைப்படங்கள், 27 புத்தகப் பதிவுகள் மற்றும் 16 விமர்சகர்களின் உள்ளீடுகள் கிடைக்கப்பெற்றன.
71வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழு, விருது பெற்றவர்களின் பட்டியலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோரிடம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151537
***
(Release ID: 2151537)
AD/RB/DL
(Release ID: 2151606)
Read this release in:
Odia
,
Telugu
,
Gujarati
,
Kannada
,
Malayalam
,
English
,
Assamese
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Punjabi