குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உலக அளவிலான போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

Posted On: 01 AUG 2025 2:20PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (01.08.2025) பங்கேற்று உரையாற்றினார்.

100 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த இந்தத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சுரங்கம் மற்றும் புவி அறிவியல் துறையில், பல்வேறு நிபுணர்களை உருவாக்கியுள்ளதாகக் கூறினார். பல்வேறு துறைகளில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது என்று அவர் கூறினார். தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் இந்தக் கல்வி நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.  மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப கல்வி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் இந்தக் கல்வி நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக  உள்ளது என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் சமூக சமத்துவமின்மை போன்ற பல்வேறு சிக்கலான மற்றும் விரைவாக மாறி வரும் சவால்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார். இத்தகைய சூழலில் இந்தக் கல்வி நிறுவனத்தின் வழிகாட்டுதல் இன்றியமையாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். புதிய மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் இந்த நிறுவனம் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

உலக அளவில் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை அதிகரிக்கச் செய்வதற்கு இந்தக் கல்வி நிறுவனம் உத்வேகம் அளித்து வருவதாகவும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை உருவாக்கும் வகையில், மாணவர்களிடையே முழுமையான சிந்தனைகளை உருவாக்குவதிலும் இந்தக் கல்வி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151229

***

AD/SV/KPG/KR

 


(Release ID: 2151395)