சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பிரதமர் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,704 டயாலிசிஸ் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன
Posted On:
01 AUG 2025 2:30PM by PIB Chennai
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் நாட்டின் 751 மாவட்டங்களில் உள்ள 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. ஜூன் 30, 2025 நிலவரப்படி மொத்தம் 1,704 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மத்திய அரசு அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆரம்பத்தில் ஹீமோடையாலிசிஸ் மையங்களை அமைக்க பரிந்துரைத்துள்ளது, மேலும் தாலுகா மட்டத்தில் சமூக சுகாதார மையங்கள் அளவில் முழுமையாக அமைக்க பரிந்துரைத்துள்ளது. டயாலிசிஸ் தேவைப்படும் பகுதிகள் மற்றும் அந்த வசதி இல்லாத பகுதிகளுக்கான இடைவெளியின் மதிப்பீட்டின்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் இது நிறைவேற்றப்படுகிறது. வருடாந்திர திட்டங்கள் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் செய்யப்படும் இந்த இடைவெளி மதிப்பீட்டின் அடிப்படையில், பிரதமர் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் ஹீமோடையாலிசிஸ் மற்றும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் சேவைகளை செயல்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை ஆதரிக்கிறது. தொலைதூர மற்றும் பழங்குடிப் பகுதிகள் உட்பட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அனைத்து மக்களுக்கும் டயாலிசிஸ் சேவைகளை நிறுவுவதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நிதியுதவி அளிக்கின்றன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151237
***
AD/SM/KR
(Release ID: 2151267)