பாதுகாப்பு அமைச்சகம்
47-வது இந்திய கடற்படைத் துணைத் தலைவராக வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் பொறுப்பேற்றுக் கொண்டார்
Posted On:
01 AUG 2025 11:21AM by PIB Chennai
47-வது இந்திய கடற்படைத் துணைத் தலைவராக வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இன்று (ஆகஸ்ட் 01) பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, அவர் புதுதில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன், 1988-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதி இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார். கடற்படையில் அவர் பல்வேறு பிரிவுகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.
பல்வேறு முன்னணி போர்க்கப்பல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில், கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரியாக பொறுப்பேற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151178
***
AD/SV/KPG/KR
(Release ID: 2151207)