ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்படுகிறது – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்

Posted On: 31 JUL 2025 4:21PM by PIB Chennai

11வது தேசிய கைத்தறி தினம் நிகழ்ச்சி 2025 ஆகஸ்ட் 7 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, ஜவுளித்துறை செயலாளர் நீலம் ஷமி ராவ், கைத்தறி மேம்பாட்டு ஆணையர் டாக்டர் எம். பீனா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாடு முழுவதிலுமிருந்து சுமார் 650 நெசவாளர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். அவர்களைத் தவிர, வெளிநாடுகளைச் சேர்ந்த கொள்முதல் செய்பவர்கள், ஏற்றுமதியாளர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வின் போது, சிறந்த நெசவாளர்களுக்கு 05 சந்த் கபீர் விருதுகள் மற்றும் 19 தேசிய கைத்தறி விருதுகள் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 07 அன்று நடைபெறும் முக்கிய விழாவைத் தவிர, ஆகஸ்ட் 1 முதல் 8 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்ளை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jul/doc2025731596201.pdf

1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 07 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தருணமாகும். இது உள்நாட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தை நினைவு கூரும் விதமாக, 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

***

(Release ID: 2150725)

AD/SM/PLM/KR


(Release ID: 2150836)