பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி, 39 ஆண்டுகால சிறந்த சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார்
Posted On:
31 JUL 2025 11:33AM by PIB Chennai
லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி இன்று ஓய்வு பெற்றார், முப்பத்தொன்பது ஆண்டுகாலமாக கீர்த்தி பெற்ற அவரது இராணுவ வாழ்க்கை இன்று முடிவுக்கு வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில், அவர் இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியையும் துறந்தார்.
சீருடைப் பனியில் இவரது புகழ்பெற்ற பயணம் தேசிய பாதுகாப்பு அகாடமியில் தொடங்கியது மற்றும் டிசம்பர் 1985 இல் தி கர்வால் ரைபிள்ஸில் நியமிக்கப்பட்டார். தனிச்சிறப்பு வாய்ந்த கல்வித் திறன் கொண்ட அதிகாரியான அவர், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கலைத் துறையில் முதுகலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படிப்பில் எம்.பில் பட்டமும் பெற்றவர்.
தனது பணிக்காலம் முழுவதும், லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணி பலதரப்பட்ட செயல்பாட்டு மற்றும் கள நிலவர உத்திகளில் பரந்த அளவிலான கட்டளை நிலை, பணியாளர்கள் நலன் மற்றும் பயிற்றுவிப்பு துறைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில், உத்திசார் மற்றும் போர் நடைமுறை இயக்கவியல் பற்றிய அவரது ஆழமான புரிதல், செயல்பாட்டு தயார்நிலை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
தேசத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிய அவரது சிறந்த சேவைக்கு இந்திய இராணுவம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது மற்றும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ச்சியான வெற்றி மற்றும் சிறப்பான சாதனைகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
***
(Release ID: 2150553)
AD/SM/KR
(Release ID: 2150633)