பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடலோர காவல்படைக்கான உள்நாட்டு ஹோவர் கிராஃப்ட் கட்டுமானம் சௌகுலே கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது

Posted On: 30 JUL 2025 12:33PM by PIB Chennai

இந்திய கடலோர காவல்படை,  ஜூலை 30, 2025 அன்று கோவாவில் உள்ள சௌகுலே & கம்பெனி பிரைவேட் லிமிடெட்டில் நடத்தப்பட்ட விழாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் ஏர் குஷன் வாகனத்தின் கட்டுமானத்தைத் தொடங்கியது. கிரிஃபோன் ஹோவர் வொர்க் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த ஹோவர் கிராஃப்ட் (நிலத்திலும் நீரிலும் பயணிக்கக் கூடிய வாகனம்), பல்வேறு கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு இந்திய நிபுணத்துவத்துடன் கட்டமைக்கப்படுகிறது. பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டதும், ஹோவர் கிராஃப்ட் வாகனங்கள் மேம்பட்ட வேகம், சாமர்த்தியமான நெகிழ்வுத்தன்மை மற்றும் ஆழமற்ற நீர் நிலைகளிலும் செயல்படும் தன்மை ஆகிய வசதிகளை வழங்கும். இது இந்தியாவின் பரந்த கடல் எல்லை முழுவதும் ரோந்து, இடைமறித்தல், தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு விரைவான ஒத்துழைப்பை வழங்கும்.

 

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நிலையைக் குறிக்கும் விழா, துணைத் தலைமை இயக்குநர் (உபகரணங்கள் & பராமரிப்பு), இந்திய கடலோர காவல்படையின் தலைமை காவல் அதிகாரி சுதிர் சாஹ்னி முன்னிலையில் நடைபெற்றது. இது அக்டோபர் 24, 2024 அன்று பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆறு ஏர் குஷன் வாகனங்களுக்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர் நிகழ்வாகும். இது தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ் சுயசார்பு செயல்பாட்டை நோக்கிய இந்திய கடலோர காவல்படையின் ஊக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

---- 

(Release ID: 2150049)

AD/SM/DL


(Release ID: 2150480)