திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா ஸ்கில்ஸ் போட்டிக்கான பதிவு தொடங்கியது

Posted On: 29 JUL 2025 11:40AM by PIB Chennai

தொழில் பயிற்சிலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்து விளங்குபரவர்களை அங்கீகரிக்கும் நாட்டின் முதன்மையான போட்டியான இந்தியா ஸ்கில்ஸ் போட்டி – 2025-க்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகம் இன்று (29.07.2025) முதல் இணையதளம் மூலம் இதற்கான பதிவுகளைத் தொடங்கியுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இப்போட்டியில் 63 வகையான திறன்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் (எஸ்ஐடிஹெச்) இணையதளம் வழியாக இப்போட்டிக்கு பதிவு செய்யலாம். இதற்கான கடைசி தேதி 2025 செப்டம்பர் 30 ஆகும்.

இந்தியாவின் மிகவும் திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு,  அவர்களது திறன்களை மேம்படுத்தி, ஊக்கமளிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது.  உலகத் திறன் போட்டி  2026 போன்ற சர்வதேச போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக பங்கேற்கும் வகையில், அவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடனும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் இந்தியர்கள் அனைவரும் பங்கேற்கலாம். குறைந்தபட்ச 16 வயது முதல்  25 வயது வரை உள்ளவர்கள் இதில பங்கேற்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி பல அடுக்கு தேர்வு செயல்முறையைக் கொண்ட ஒரு போட்டியாகும். ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு திறனுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கூடுதல் விவரங்களுக்கு www.skillindiadigital.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

போட்டியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பு:  https://www.skillindiadigital.gov.in/account/register?returnUrl=%2Findia-skills 2025&utm_source=BannerClicks&utm_medium=Web&utm_campaign=IndiaSkills

***

AD/SM/PLM/RJ/KR


(Release ID: 2149625)