தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்னிந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தூர்தர்ஷனின் கட்டணமில்லா டிஷ் சேவை விரிவாக்கம்

Posted On: 23 JUL 2025 4:32PM by PIB Chennai

பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி, கட்டணம் இல்லாத ஒளிபரப்பை, நேரடியாக வீடுகளுக்கு டிஷ் மூலம் சேவைகளை வழங்குகிறது. இந்த தொலைக்காட்சி சேவைகள், தொலைதூரப் பகுதிகள், எல்லையொட்டிய பகுதிகள் மற்றும் பிற வழிகளில் எளிதில் தொலைகாட்சி சேவைகள் சென்றடையாத பகுதிகள் உட்பட நாடு முழுவதும் பரவியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த தொலைகாட்சி சேவைகள் நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளன. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, 2024-ம் ஆண்டு கட்டணமில்லா சேவைகள் நாடு முழுவதும் சுமார் 49 மில்லியன் வீடுகளை சென்றடைகிறது. இந்த எண்ணிக்கை 2018-ல் 33 மில்லியனாக இருந்தது, இது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

தூர்தர்ஷன் தொலைகாட்சியில் கட்டணமில்லா டிஷ் மூலம் தென்னிந்திய மொழிகளுக்கான அலைவரிசைகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறந்த பிராந்திய பிரதிநிதித்துவத்திற்காக, தூர்தர்ஷன் தொலைகாட்சியில் மின்னணு ஏல நடைமுறைகள் (2025-ல் நடத்தப்பட்டது) தென்னிந்திய மொழிகளுக்கான அலைவரிசைகளுக்கான நேரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தென் பிராந்தியத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான நாடவடிக்கைகைகளை உறுதி செய்யும் வகையில் தகுதிகளுக்கான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அண்மையில் நடத்தப்பட்ட மின்னணு ஏலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளுக்கான அலைவரிசைகளுக்கு பிரத்யேக நேரங்களும் வழங்கப்பட்டன.

01.04.2025-ம் தேதி முதல் டிவி 9 தெலுங்கு, ஆஸ்தா கன்னடம் மற்றும் ஆஸ்தா தெலுங்கு ஆகிய மூன்று தென்னிந்திய மொழி தனியார் தொலைக்காட்சி சேவைகள் தூர்தர்ஷன் தொலைகாட்சியில் இணைக்கப்பட்டுள்ளன.

தூர்தர்ஷனின் சொந்த பிராந்திய அலைவரிசைகளுக்கான டிடி தமிழ், டிடி சப்தகிரி, டிடி சந்தன, டிடி யாதகிரி மற்றும் டிடி மலையாளம் ஆகியவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. சேனல்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு அவற்றின் தெரிவுநிலையை மேம்படுத்த சிறப்பான விளம்பர உத்தியும் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தவிர, 27 கல்வி சேனல்கள் உள்ளன. அவை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன.

மக்களவையில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இதனைத் தெரிவித்தார்.

******

(Release ID: 2147344)

VL/TS/KPG/DL


(Release ID: 2147505)