குடியரசுத் தலைவர் செயலகம்
டிஜிட்டல் தீர்வு, ராணுவ கட்டுமானம், நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு எடுத்துரைத்தார்
Posted On:
23 JUL 2025 1:07PM by PIB Chennai
இந்திய பாதுகாப்பு எஸ்டேட் சேவை, ராணுவ பொறியாளர் சேவைகள், மத்திய நீர் பொறியியல் சேவை பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (2025, ஜூலை 23) சந்தித்தனர்.
இந்திய பாதுகாப்பு எஸ்டேட் சேவை அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், விரைவான தொழில்நுட்ப மாற்றம் ஏற்படும் இத்தருணத்தில், டிஜிட்டல் தீர்வுகளை ஒருங்கிணைப்பது அவசியம் என்று கூறினார். தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடர்ந்து தெரிந்துகொள்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் கடமை என்று தெரிவித்தார்.
ராணுவ பொறியாளர் சேவைகள் அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், ராணுவ கட்டுமானத் துறையில் வளர்ந்து வரும் தலைவர்களாக உள்ள இளம் ராணுவ பொறியாளர் அதிகாரிகளுக்கு பொறுப்புடன் கட்டுமானத்தை மேற்கொள்வது என்பது ஒரு முக்கிய கடமை என்று கூறினார்.
மத்திய நீர் பொறியியல் சேவை அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நீர்வளங்களின் நீடித்த வளர்ச்சி, திறமையான நீர் மேலாண்மை ஆகியவை நீர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்தார். குறிப்பாக மாறிவரும் பருவநிலை சூழல்களுக்கு ஏற்ப. தூய்மையான நீரை வழங்குவதன் மூலமும், நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலமும், இந்தியா பொது சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் வேளாண் உற்பத்தித்திறனை அதிகரித்து இயற்கை வளங்களின் நீடித்த பயன்பாட்டை உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2147163)
VL/IR/AG/KR
(Release ID: 2147295)