குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அரசியல் கட்சிகளிடையே நல்லுறவை ஏற்படுத்த குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 20 JUL 2025 7:55PM by PIB Chennai

அரசியல் கட்சிகளிடையே நல்லுறவு மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்தும் வகையில் குடியரசுத்  துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், “தயவுசெய்து பரஸ்பர மரியாதையுடன் இருங்கள் என்று அரசியல் துறையில் உள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். தொலைக்காட்சியிலோ அல்லது வேறு வழிகளிலோ ஒரு கட்சியின் தலைமைக்கு எதிராக ஆபாசமான மொழியை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம்.. இந்தக் கலாச்சாரம் நமது நாகரிகத்தின் சாராம்சம் அல்ல. நாம் நமது மொழியில் கவனமாக இருக்க வேண்டும்…..தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அரசியல்வாதிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியல்வாதிகளை இழிவாகப் பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது”, என்று தெரிவித்துள்ளார்.

 

 

குடியரசுத் துணைத் தலைவர் மாநாட்டில் நடைபெற்ற மாநிலங்களவை அனுபவப் பயிற்சித் திட்டத்தின் எட்டாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தன்கர், “தேசிய நலனைவிட அரசியலலுக்கு முக்கியத்துவம் அளிக்க  வேண்டாம்நாட்டின் வளர்ச்சியில் அரசியல் வேண்டாம். தேசிய பாதுகாப்பு, தேசிய அக்கறை போன்ற பிரச்சினைகளில் அரசியல் வேண்டாம். உலகளவில் நமக்கு நல்ல மதிப்பு உள்ளது. பாரதத்தை வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணமே நமது கூற்றுக்கு எதிரானது”, என்று கூறினார்.

 

 

வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அர்த்தமுள்ள விவாதங்களின் அவசியத்தை எடுத்துரைத்த திரு தன்கர், “நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். நமது பார்வையில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால், மற்றவர்களின் கண்ணோட்டத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். நமது பார்வையில் நாம் நம்பிக்கை வைத்து, "நான் மட்டுமே சரி, மற்ற அனைவரும் தவறு" என்று நினைத்தால் - அது ஜனநாயகம் அல்ல. அது நமது கலாச்சாரம் அல்ல. அதுதான் ஆணவம். அதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர் ஏன் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் - அதுதான் நமது கலாச்சாரம். வரவிருக்கும் கூட்டத்தொடர் முக்கியமானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். பாரதத்தை உயர்த்துவதற்கான அர்த்தமுள்ள விவாதங்களும் தீவிரமான ஆலோசனைகளும் நடைபெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். எந்த நேரத்திலும் சில பகுதிகளில் சில குறைபாடுகள் இருக்கும். முன்னேற்றத்திற்கு எப்போதும் இடமுண்டு. எதையாவது மேம்படுத்த யாராவது பரிந்துரைத்தால், அது கண்டனம் அல்ல. அது விமர்சனம் அல்ல. இது மேலும் வளர்ச்சிக்கான பரிந்துரை மட்டுமே. எனவே, ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபடுமாறு அரசியல் கட்சிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்”, என்று வலியுறுத்தினார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146259

 

(Release ID: 2146259)

AD/BR/KR

***


(Release ID: 2146283)