பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் எரிசக்தி மாற்ற நடைமுறைகளில் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனையாளர்கள் தீவிர பங்காற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி

Posted On: 18 JUL 2025 5:55PM by PIB Chennai

புதுதில்லியில் நேற்று (18.07.2025) நடைபெற்ற அகில இந்திய பெட்ரோலிய விற்பனையாளர்கள் (டீலர்கள்) சங்கத்தின் (AIPDA -ஏஐபிடிஏ) கூட்டத்தில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள பெட்ரோலிய விற்பனையாளர்கள் (டீலர்கள்) இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தில் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பெட்ரோலிய சில்லறை விற்பனையாளர்களின் மிகப்பெரிய தேசிய அமைப்பாக இந்த ஏஐபிடிஏ (AIPDA) உள்ளது என அவர் கூறினார். இந்தியாவின் எரிசக்தி சூழலில் பசுமை முயற்சிகளை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

எரிசக்தி சூழல் அமைப்பில் பெட்ரோலிய விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்தார். 2024 அக்டோபரில் டீலர் லாப வரம்புகளை திருத்தியமைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் மேற்கோள் காட்டினார். கருத்துக் கூறும் தளங்கள், குறை தீர்க்கும் கட்டமைப்புகள் ஆகியவை தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

உயிரி எரிபொருள் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், 2025-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20% எத்தனால் கலப்பு அடையப்பட்டுள்ளதாகவும், இது 2014-ல் 1.53% ஆக மட்டுமே இருந்ததாகவும்  கூறினார். இந்த சாதனையின் விளைவாக 1.4 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிப்பு, கார்பன் வெளியேற்றத்தில் 717 லட்சம் மெட்ரிக் டன் குறைப்பு, விவசாயிகளுக்கு 1.21 லட்சம் கோடி வருவாய் ஆகிய பலன்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். தினமும் 6.7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் பெட்ரோலிய விற்பனையாளர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். பெட்ரோலிய விற்பனையாளர்கள் மக்களுக்கும் தேசிய எரிசக்தி அமைப்புக்கும் இடையிலான இடைமுகமாகத் திகழ்கின்றனர் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

*****

(Release ID: 2145847)

AD/PLM/SG

 

 


(Release ID: 2146079) Visitor Counter : 3