குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர், ஜூலை 14, 15-ம் தேதிகளில் ஒடிசாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
Posted On:
13 JUL 2025 5:29PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளையும் நாளை மறுநாளும் (2025 ஜூலை 14,15) ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர், கட்டாக் நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
2025 ஜூலை 14-ம் தேதி, புவனேஸ்வரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ்-சின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
ஜூலை 15-ம் தேதி, ராவன்ஷா பல்கலைக்கழகத்தின் 13-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் கட்டாக்கில் உள்ள ராவன்ஷா பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் மூன்று கட்டடங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். கட்டாக்கில் நடைபெறும் நிகழச்சியில் ஆதிகபி சரளா தாஸின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024-ம் ஆண்டுக்கான கலிங்க ரத்னா விருதை வழங்குகிறார்.
****
(Release ID: 2144376)
AD/TS/PLM/SG
(Release ID: 2144386)